மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக் குழு பரிந்துரைகள் 34 திருத்தங்களுடன் அமலுக்கு வருகிறது.

7-வது ஊதியக்குழுவில் திருத்தி அமைக்கப்பட்ட 34 சலுகைகள், அகவிலைப்படி ஆகியவற்றுக்கு மத்தியஅரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த பரிந்துரைகள் அனைத்தும் ஜூலை மாதத்தில் இருந்து
நடைமுறைக்கு வர இருப்பதால், ஏறக்குறைய 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், மாற்றி அமைக்கப்பட்ட சலுகைக்கான பணத்தை ஊதியத்தோடு சேர்த்து பெறுவார்கள். இதன் மூலம் மத்தியஅரசுக்கு கூடுதலாக ரூ.30 ஆயிரத்து 748 கோடி செலவாகும்.

ஓப்புதல்
பிரதமர் மோடி அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பாக இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனால், அமைச்சரவைக் கூட்டம் ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில் நேற்று நடந்த பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பரிந்துரை
7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது அவர்கள் சார்ந்திருக்கும் நகரத்தின் அடிப்படையில் 24 சதவீதம், 16 சதவீதம், 8 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதாவது 25 சதவீதம் முதல் 27 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என நிர்ணயித்தது.
எதிர்ப்பு
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் நல அமைப்புகள், அகவிலைப்படி 30 சதவீதம், 20 சதவீதம், 10 சதவீதம் என இருக்க வேண்டும், இதை அடிப்படை ஊதியத்தோடு இணைத்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆலோசிக்க குழு
இதையடுத்து, 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்ய நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்தது. இதில் உள்துறை விவகாரச் செயலாளர், சுகாதாரத் துறை, பணியாளர் நலத்துறை செயலாளர், ரெயில்வே உறுப்பினர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தனர்.
அமைச்சரவை ஒப்புதல்
இந்த அதிகாரமிக்க செயலாளர்கள் குழு கடந்த 1-ந் தேதி கூடி 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள், சலுகைகள் குறித்து ஆய்வு செய்து அதன் முடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பியது. இந்த குழு ஏறக்குறைய 197 பரிந்துரைகளை ஆய்வு செய்து அதில் 53 சலுகைகளை நீக்கி, 37 சலுகைகளை ஒன்றாக இணைத்தது.
இந்த பரிந்துரைகள் அனைத்தும் பிரதமர் மோடி தலைமையிலான  மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி 7-வது ஊதியக்குழுவில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் விவரம் வருமாறு-
வீட்டு வாடகைப்படி 24 சதவீதம்
தொழிலாளர்கள் நல அமைப்புகள் வீட்டு வாடகைப்படி(எச்.ஆர்.ஏ.) நகரங்களுக்கு ஏற்றவாறு 30 சதவீதம், 20 சதவீதம், 10 சதவீதம் என இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. ஆனால், அகவிலைப்படி, 24 சதவீதம், 16 சதவீதம், 8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி அடிப்படை ஊதியம் ரூ.18 ஆயிரம் பெறுபவர்கள் வீட்டுவசதிப்படியை நகரங்களுக்கு ஏற்றார்போல், குறைந்தபட்சம் ரூ.5,400, ரூ.3,600, ரூ.1,800 எனப் பெறுவார்கள். இதன் மூலம் 7.5 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.
சியாச்சின் ராணுவ வீரர்கள்
சியாச்சின் மலைப்பகுதியில் பணிபுரியும் வீரர்கள் மாதப்படி உயர்த்தப்பட்டு, ரூ.14 ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரம்வரை பெறுவார்கள். ராணுவ அதிகாரிகள் மாதம் ஒன்றுக்கு ரூ.21 ஆயிரத்தில் இருந்து ரூ. 42 ஆயிரத்து 500 வரைபெறுவார்கள்.
ஒய்வூதியம் பெறுவோர்கள்
ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு மாதம் வழங்கப்படும் மருத்துவச் செலவுகள் ரூ.500லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விடுப்பு எடுக்காமல் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.4500 லிருந்து ரூ. 6,750ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மருத்துவமனை நர்சுகள்
மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் அமைச்சகப் பணியாளர்களுக்கு படிகளை ரூ.4,800லிருந்து ரூ. 7,200 ஆக உயர்த்தியுள்ளது. 
மத்திய அரசின் மருத்துவமனையில் பணிபுரியும் நர்சுகள் அறுவை சிகிச்சை அரங்குகளில் பணிபுரிவதற்கான படிகள் ரூ. 360ல் இருந்து ரூ. 540ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நோயளிகளை பராமரிக்கும் படிகள் அளவு ரூ. 2,100 முதல் ரூ.5,300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
ஒட்டுமொத்தமாக மத்தியஅரசு ஊழியர்களுக்கு 23 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு அனைத்தும் ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022