ஜியோவுக்கும் சரி ஏர்டெல்லுக்கும் சரி... யாரோட நெட்வொர்க் வேகமானது

Who is the 4G champion?
ஜியோவுக்கும் சரி ஏர்டெல்லுக்கும் சரி... யாரோட நெட்வொர்க் வேகமானது என அவங்களுக்கே தெரியாது.

ரெண்டு பேருக்குமே அவ்வளவு குழப்பம். என்னோடதுதான் வேகம் அதிகம்னு ஏர்டெல் கூற, இல்லவே இல்ல.. நான்தான் ஒரிஜினல் 4ஜினு ஜியோ சொல்லும். வாரத்துக்கு ஒரு சண்டை போட்டுட்டு இருந்தவங்க கொஞ்ச நாள் அமைதியாவே இருக்க,
சும்மாவே இருந்தா எப்பிடி இந்தாங்க சண்ட போடுறதுக்கு மேட்டர்னு ரிலீஸ் ஆயிருக்கு ஓப்பன் சிக்னல் ஆய்வு முடிவுகள்.
கடந்த மாதம் ஏர்டெல் தனது 4ஜி நெட்வொர்க் தான் வேகமானது என்று விளம்பரப்படுத்த அது பொய் விளம்பரம் என்று புகார் அளித்து அந்த விளம்பரத்தையும் நிறுத்த செய்தது ஜியோ. ட்ராய் (TRAI) எடுத்த கணக்கின்படி ஜியோ தான் வேகமான நெட்வொர்க். ஜியோவின் வேகம் 16 MBPS ஆகவும், ஏர்டெல்லின் வேகம் 7.66 MBPS தான் என்றும் TRAI கூறியது. ஆனால், ஜியோ வருகிறதா என்பதை அதை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் இணைய வேகங்களை அளவீடு செய்யும், உலக அளவில் புகழ்பெற்ற ஓப்பன் சிக்னல் நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட தரவுகளின் அடிப்படையில் எந்த நெட்வொர்க் வேகமானது என்ற முடிவை வெளியிட்டுள்ளது அதில் முதலிடம் பிடித்திருப்பது... ஏர்டெல்.
தமிழ்நாடு டெல்லி, மும்பை, கர்நாடகா, என நான்கு இடங்களில் 93,464 ஸ்மார்ட்போன் பயனர்களிடம் இருந்து 2016 டிசம்பர் முதல் கடந்த பிப்ரவரி வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவையுடன் 3ஜி சேவையையும் சேர்ந்தே அளிப்பதால் அது எளிதில் முதலிடம் பிடித்திருக்கிறதாக கூறுகிறது ஓப்பன்நெட்வொர்க். ஏர்டெல்லின் சராசரி இணைய வேகம் 11.5Mbps ஆக கணக்கிடப்பட்டுள்ளது.
அதே வேளையில் செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ஆச்சரியமளிக்கக்கூடிய வகையில் வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஜியோ டவர்கள் அமைப்பதில் வேகமாக இருப்பதால் மற்ற நிறுவனங்களை விட 91.6% அதிக இடங்களில் சிக்னல் கிடைக்கும் திறனை பெற்றுள்ளதாகவும் ஆய்வு முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது .4ஜி கவரேஜை பொறுத்தவரை ஜியோ முதலிடத்தை பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் 4ஜி நெட்வொர்க்கை பொறுத்தவரை ஏர்டெல் மற்றும் ஐடியா தரவிறக்க வேகத்தில் முதலிடம் பிடித்திருக்கின்றன ஆனால் 4ஜி நெட்வொர்க் கவரேஜில் ஜியோதான் டாப்..
திடீரென வேகம் குறைவது நெட்வொர்க் தாமதம் போன்ற குறைபாடுகளை பொறுத்த வரை வோடபோன் நெட்வொர்க் குறைவாகவும் ஜியோ நெட்வொர்க்கில் இதைப்போன்ற பிரச்சினைகள் அதிகம் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் 4ஜி வேகம் மிக குறைவாகவே உள்ளதாகவும் மற்ற நாடுகளில் சராசரி வேகம் 17.4Mbps எனவும் தெரிவித்துள்ள ஓப்பன் சிக்னல் இந்திய சந்தைகளில் அதிகரிக்கும் போட்டியால் 4ஜி வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது 4ஜி தகவல் தான். 3ஜி வேகத்தில் ஏர்டெல்லும் வோடாஃபோனும் முன்னிலையில் இருக்கின்றன. ஏர்டெல்லின் வேகம் 4.7 Mbps, வோடோஃபோனின் வேகம் 4.3 Mbps. 3ஜியில் கடைசி இடத்தை பிடித்திருப்பது ரிலையன்ஸ் தான். ஐடியாவும், பி.எஸ்.என்.எல்லும் இடைப்பட்ட இடங்களில் இருக்கின்றன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022