தேர்வுக்கு தயாராகுங்கள் - மாணவர்களின் அச்சத்தைப் போக்கும் டிப்ஸ்...


பொதுத் தேர்வுகள் நெருங்கி விட்டன!

இவ்வேளையில் மாணவர்களுக்கு இனம் புரியாத ஒரு வித அச்சம், தடுமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பதை இப்பகுதியில் பார்ப்போம்...
*பொதுத் தேர்வை ஏதோ மிகப்பெரிய தேர்வாக கருதி அஞ்சாமல் வழக்கமான மாதாந்திர தேர்வாக நினைத்து இயல்பாக இருக்கவும். அதற்கென்று அசட்டையாகவும் இருக்க வேண்டாம்.
*படிப்பதற்கு அட்டவணை தயார் செய்து படிக்கலாம். எளிதான பாடங்களை இறுதியில் வைத்து, உங்களுக்கு கடினமான பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.
* தேர்வு முடியும் வரை சினிமா, டிவி, கைபேசி, இணையதளம் போன்ற பொழுது போக்கு சமாச்சாரங்களை ஒதுக்கி விடலாம்.
*படிக்கும் போது இடையிடையே நன்றாக மூச்சை உள்ளிழுத்து கண்களை மூடி தியானம் செய்வது மனதை ஒருமுகப்படுத்தும்.
*பாடங்களில் சந்தேகம் இருந்தால் உடனடியாக ஆசிரியரிடம் கேட்டு தீர்த்துக் கொள்ளலாம்.
* கணிதம், இயற்பியல், வேதியியல் பாட சூத்திரங்கள், மூலக்கூறுகளை மனைப்பாடம் செய்வதை விட எழுதிப் பார்ப்பது நல்லது.
* முடிந்தவரை புத்தகங்களை பார்த்து உரு போடாமல், மனதுக்குள் அமைதியாக படித்துப் பார்ப்பது நலம்.
* இரவு நெடுநேரம் கண் விழித்து படிக்காமல் பத்து மணியோடு படிப்பை நிறுத்திவிட்டு, ஆழ்ந்த தூக்கம் தூங்கி, அதிகாலையில் படிப்பை தொடருவது நலம்.
*அதிகமாக காபி, டீ போன்ற பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
* தேர்வுக்கு தயாராகும் நேரங்களில் எண்ணெய், கொழுப்பு பதார்த்தங்களை தவிர்த்து எளிதில் ஜீரணமாக கூடிய உணவை உட்கொள்ளுதல் நலம். அதே நேரம், பட்டினி இருப்பதை தவிருங்கள்!
* தேர்வுக்கு தயார் செய்யும் போது மாணவர்கள் குழுமமாக தயார் செய்தாலும், தேர்வுக்கு ஒரு வாரம் முன்பிருந்து தனியே படித்தலே நலம்.
* தேர்வு அறையில் நாம் ஒவ்வொரு பகுதிக்கும் விடையளிக்க தேவைப்படும் கால அவகாசத்தை திட்டமிட்டுக் கொள்ளுதல் நல்லது.
* ‘எல்லாம் தெரியும்’ என்கிற மனப்பான்மை வேண்டாம்! ‘எதுவுமே தெரியாது’ என்கிற பயம் வேண்டவே வேண்டாம்!!

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022